Admission Rank List 2022
2022 - 2023 கல்வியாண்டு மாணவர் சேர்க்கை தொடர்பாக

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2022-2023 ஆம் கல்வியாண்டிற்கான முதலாமாண்டு இளம் கலை, அறிவியல் மற்றும் இளம் வணிகவியல் மாணவ-மாணவியர் சேர்க்கைக்கான கலந்தாய்வு பின்வரும் தேதிகளில் நடைபெற உள்ளது.



04.08.2022 - சிறப்பு ஒதுக்கீடு அனைத்துப் பாடப்பிரிவினருக்கும் (விளையாட்டு பிரிவு, மாற்றுத்திறனாளி, முன்னாள் இராணுவத்தினர் வாரிசு, தேசியமாணவர் படை மற்றும் அந்தமான் நிகோபர் மாணவர்)

06.08.2022 - வணிகவியல்

08.08.2022 - இளம் அறிவியல் பாடப்பிரிவுகள் (கணிதம் (தமிழ் மற்றும் ஆங்கில வழி), இயற்பியல், கணினிஅறிவியல், புவியமைப்பியல்)

10.08.2022 - இளங்கலைபாடப்பிரிவுகள் (வரலாறு, பொருளியல்)

11.08.2022 - இளங்கலைப் பாடப்பிரிவுகள் (தமிழ், ஆங்கிலம்)

கலந்தாய்வு தொடங்கும் நேரம்:காலை 9.30 மணி

கலந்தாய்வில் கலந்துகொள்ளவரும் மாணவ-மாணவிகள் தங்களுடைய +1, +2 மதிப்பெண் பட்டியல், மாற்றுச் சான்றிதழ் (TC), சாதிச் சான்றிதழ், சிறப்புஒதுக்கீட்டுக்குரிய சான்றிதழ், இணையதளத்தில் விண்ணப்பித்தபடிவம், ஆதார் அட்டை ஆகியவற்றின் அசல் மற்றும் இரண்டு நகல்கள், பாஸ்போர்ட் புகைப்படம-4 ஆகியவற்றை எடுத்துக் கொண்டு தங்கள் பெற்றோர்களுடன் கலந்துகொள்ளவேண்டும். கலந்தாய்வில் சேர்க்கை பெற்ற மாணவ-மாணவிகள் கட்டணத்தை கல்லூரி அலுவலகத்தில் செலுத்திட அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் மாணவ-மாணவிகள் தங்கள் தரவரிசைப் பட்டியல் விவரங்களையும், கலந்தாய்வு நாட்களையும் கல்லூரி இணையதளமான (www.gasckovilpatti.com) என்ற இணையதளத்தில் காணலாம்.

முதல்வர்,
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
கோவில்பட்டி